துகிலாத நினைவுகள்

கேட்காத தூது ஒன்று
கண்ணின் முன் அசைய
கண் கண்ட கலங்கரை
கனவோடு தான் வந்ததே
கண் கொண்ட மதியொன்று
முகில் கொண்ட மேனியோடு
அதிசயமாக அசைந்தாடி
வந்ததே அழகோவியமாக
வசைபாடும் பூக்களும்
வளைந்தோடும் வண்டுகளும்
தன் அறிவோடு வினவியதே
வரம் பெற்ற வெண்ணிலா
வெண்முகில் பூ உடுத்தி
கருமை நிற கனவிலே
மனம் நிறைத்து நின்றதே



முகவரி:
A.Richard Edwin
Department of Mechanical,
PSNA college of engineering and technology,
kothandaraman nagar,
dindigul-624622.

எழுதியவர் : ஆ.ரிச்சர்டு எட்வின் (29-Oct-14, 12:07 pm)
பார்வை : 113

மேலே