உன் நினைவுகளில்

உன்னிடம் பேசாமல் இருக்கும்
நாட்கள்…
மரண வலியைத் தருகிறது…
உன்னைப் போல….
மறக்க முயன்று முடியாமல்
தோற்று தான் போகின்றேன்…
ஒவ்வொரு நொடியும்…
உன் முக காட்சியால்….
அழிக்க எண்ணுகிறேன்… உன்
நியாபகத்தை… -- ஆனால்
அழிவது நானென்று தெரியாமல்…
உன் மௌனம் அழகு தான்…
உன்னைப்போல…
கொல்லாமல்
கொல்கிறதே என்னை….
அணுஅணுவாய் பிளந்து….
கண்களில் நீரோடு வாழ்கிறேன்
நானிங்கே…
உன்னை மறக்க முடியாதா?....
கேள்விகள் தான் என்னிடம்
உள்ளது…
விடையும் தெரியவில்லை….
வழியும் தெரியவில்லை…
மறக்க எண்ணும் வேளையில்…
கோடி மடங்கு என்
மனது உன்னை நினைப்பதை…
என்னால் தடை செய்ய
இயலாது போகிறதே…
ஏன்?
மறந்து தான் போகின்றேன்…
உன்னையல்ல… என்னை…
உன் நினைவுகளில் லயித்து….

எழுதியவர் : satheesh (29-Oct-14, 4:07 pm)
Tanglish : un nenaivugalil
பார்வை : 151

மேலே