த்ரிஷா இல்லைனா திவ்யா

த்ரிஷா இல்லைனா திவ்யா

கத்தி விஷப்பாட்டில்
கார் லாரி பஸ்
கிணறு ஆறு கடல்
துப்பாக்கி தூக்குக்கயிறு

ஒருசேரக்கூடிப்
பேச்சுவார்த்தை நடத்தின-சாகுவதற்காக...

தேடினான்! தேடினான்!
எங்கேயுமே காணவில்லை.

இறுதியாக முடிவெடுத்தான்.
மலையை நோக்கி விரைந்தான்
வியப்படைந்து நின்றான்.

எல்லாமே சாகத்தயாராய் இருந்தன.

"இங்கே யாருமே சீதையாக இல்லை-ஆதலால்
இராமனாக யாரும் இல்லை
இங்கே யாருமே இராமனாக இல்லை-ஆதலால்
சீதையாக யாரும் இல்லை" என
கத்தி கத்திச் சொன்னது.

மனதை தேற்றிக்கொண்டு சாகும்
முடிவைக் கைவிட்டுத் திரும்பினான்.

மேலே பறந்துகொண்டிருந்த
விமானத்திலிருந்து விண்ணப்பம் விழுந்தது
எடுத்துப் படித்தான்.

"உன்னைக் காதலிக்க ஆசை"


......................................................................................






கொஞ்சம் உயிரையும் காதலியுங்கள் நண்பர்களே...
உயிரைக் கொடுத்தவர்கள் பெற்றோர்...




கவிதையில் சொல்லவருவது தர்த்கொலை செய்வது தவறு என்பதே..அது ஆணாயினும் பெண்ணாயினும் யாரயிருனும் பொருந்தும்...சுரேஷ் இல்லேன்னா ரமேஷ்...

எழுதியவர் : திருமூர்த்தி.வெ (29-Oct-14, 4:20 pm)
பார்வை : 90

மேலே