யோசியுங்கள்
ஊரெல்லாம் தேடி..
அப்புறமா சொல்கிறோம்
என்று ஒரே பாட்டைப் பாடி..
அப்படியே கிடப்பில் போட்டு வைத்து
பல இடங்கள் சலித்து சலித்துப் பார்த்து
சலிப்பில்லாமல் வேர்த்து
விறுவிறுப்பாய் காலம் கடத்தி
வேடிக்கை வாழ்க்கை நடத்தி
வீணாய்ப் போன வீணர்கள்
யோசிப்பதில்லை ..
பெண் பார்க்கும் படலம்
என்ற பெயரில் அவர்
செய்யும் வியாபாரம்
இது என்பதை!
உண்மையில் இதுவும்
ஒரு பெண் வதை!
அப்புறமா சொல்கிறோம்
என்று மாப்பிள்ளைக்கு
தகவல் சொன்னால்
என்ன ஆவீர்கள்
என்பதையும் யோசியுங்கள்!

