முழுமை வாழ்வு

இன்பம்+துன்பம்=சமாதானம்
இவை நிரம்பியதே -நம்
இனிமை வாழ்வு -அவையே
முழுமை வாழ்வு
இல்லையேல் -அவை
இனிமையற்ற வாழ்வு!

இனிமைகள் என்றும்
நம்மைச் சுற்றியே
இதமாய் நாமும்
வாழ்த்திடுவோம் -இவ்
வையமதில்!

பாரமற்ற வாழ்வை
பக்குவமாய் நாமும்
வாழ்ந்திடுவோம் -இப்
பாரினில் !

இறுக்கமற்ற வாழ்வை
இளமையுடனே நாமும்
வாழ்ந்திடுவோம் -இத்
தரணியில்!

சொந்தங்கள் நிறைந்த
வாழ்வை சுகமாய்
நாமும் வாழ்ந்திடுவோம் -இச்
சுதந்திர தேசத்தில்!

வாழும் வாழ்வுக்கு
பொருள் தேடி
பொறுமையுடனே
நாமும் வாழ்ந்திடுவோம் -இப்
பூவுலகில் !

முத்திரையான வாழ்வை
முகாந்திரம் இன்றி
வீணடிக்காமல்
நட்புடன் வாழ்வோம் -இந்
நானிலத்தில் !

பூக்களும் கூட
உதிரும் நிலையிலும்
அடையாளமாய் ஒரு
கனியை விட்டுவிட்டு
செல்கிறது !

அறிவுள்ள மானுடம்
அறியாமையால்
அழகிய வாழ்வை
அவசரமாய் முடிக்கிறது !

இதுவா முழுமை
இல்லை இது வெறுமை !!!

வெறுமையை துரத்தி
வேண்டியதைச் சேர்த்து
செழிப்புடன் வாழ்வோம் !

நம் வாழ்வை பிறருக்கு
வழிகாட்டியாகவும்!
முத்திரையாகவும் !!
முழுமை வாழ்வாய்!!!

எழுதியவர் : பெ. ஜான்சி ராணி (29-Oct-14, 8:18 pm)
Tanglish : muzhumai vaazvu
பார்வை : 109

மேலே