இளமை பங்காளிகள்

இத்துப் போன இதிகாசங்களாய்
இருண்டு போகும் இளமைக்காலம்

கடந்து போன காலம் காட்டி
ஓலமிட்டு ஒடுங்கும் கூட்டம்

ஆசை கொண்ட பெற்றோர்களால்
அடக்கப்படும் அறிவின் நாட்டம்

எதிர் கால இனிமை வேண்டி
நிகழ்காலத்தை நிர்ப்பந்தமாக்கும்
பெருசுகளின் பரிசுகள்

பள்ளி சுமை பாலகனாய்
பருவ வயதில் போதகனாய்
இந்தியனாய் இயல்பை இழந்த
இளமையின் பங்காளிகள்!!!!

எழுதியவர் : கானல் நீர் (29-Oct-14, 8:39 pm)
சேர்த்தது : கானல் நீா்
பார்வை : 597

மேலே