என் இலை
உன் கவிதைக்குள்
மயிலிறகாய்
குட்டி போட்டுக்
கொண்டே இருக்கிறது
என் யோசனை......
---------------------------------------------
உன் தேசத்தில்
குடை கூட
மழை விரிக்கிறது......
------------------------------------------------
உன்
மௌனங்களில்
சத்தம் போடட்டும்
என் மௌனமும்....
----------------------------------------------
உன் நிலவை
ஒரு போதும் கடக்க முடியாத
தூரத்தில்
என்
தொடுவானம்.....
----------------------------------------------
நீ அருவியாகும்
பொழுதில்
சத்தமின்றி முத்தமிடும்,
வழி தவறிய
என் இலை.......
-----------------------------------------------
கவிஜி