தோட்டக்காரி

வாடியிருந்த தளிர்கள்
துளிர்க்கச் சாத்தியமா...?
பார்த்துவிடலாம் ..
எங்கே ... கொஞ்சம்
தொட்டுப்பார்...!!

தானாக ரத்தம்
சுத்திகரித்துக் கொள்கிறதாமே
ஒவ்வொன்றாய் நீ
கடித்துத் துப்பியிருந்த
அருகம்புல் கற்றைகள்....!!

நீ... சிரித்தபோது
சிரித்த பூக்கள்
அப்படியேதானிருந்தன...
நீ.. அழுதிருந்தபோதும்..
பாவம்.. பூக்கள் சிரித்தால்
பூவும் சிரிக்குமென்ற
நம்பிக்கையாக இருந்திருக்கும்..!!

தழைந்திருந்தும் நீ
காணாது போயிருந்த
வாழைப் பூக்களுக்கு
கோபமாம்.....! தவழ்ந்தே வளர்ந்த
மல்லிகைக்கொடி
உனக்குப் பக்கத்திலிருந்ததில்...

இலைகள் கிழித்து
தலைவிரித்தாடியிருந்தன....!!

எழுதியவர் : நல்லை.சரவணா (29-Oct-14, 9:15 pm)
பார்வை : 163

மேலே