அபிக்கூ புதுவகை சந்தம்

இறைவா இங்கே
தனியாய் நிற்கும்
படிஎனை வைக்காதே -உன்
அருள்புரி இப்போதே

கலங்கி நிற்கும்
கண்ணீர் துடைத்து
சிரிப்பினைத் தந்திடுவாய்-நல்
சிறப்பினை ஈந்திடுவாய்

அறிவும் தெளிவும்
அழகாய்த் தந்து
மகிழ்ச்சியாய் நானிருக்க-வா
மனதினில் குடியிருக்க

உருவே இல்லா
ஒருவன் நீயே
முழுவதும் கற்றவனே-என்றும்
முதல்முடி வற்றவனே

துணையாய் வருவாய்
துன்பம் களைவாய்
கருவினில் காத்தவனே -என்
குருவென வாய்த்தவனே

கருணை வடிவே
கருத்தில் வாழும்
கவிதையே என்னிறைவா-என்
பிரார்த்தனை செய்நிறைவா

எழுதியவர் : அபி (29-Oct-14, 9:18 pm)
பார்வை : 66

மேலே