உயிரும் உதற விழிகள் நனைய - இராஜ்குமார்
உயிரும் உதற விழிகள் நனைய
=============================
மழைத்துளி பாரம் போலும்
மேகம் தூவி விட்டது
தேன்துளி காரம் போலும்
பூக்கள் விற்று விட்டது
நதிகள் அனாதை போலும்
மலை தொலைத்து விட்டது
அலைகள் தொல்லை போலும்
கடல் விரட்டி விட்டது
கற்பனை கவலை போலும்
கனவு கலைந்து விட்டது
சிந்தனை குறைகள் போலும்
நரம்பு நகர்ந்து விட்டது
தென்றல் வெப்பம் போலும்
காற்று துரத்தி விட்டது
மின்னல் இன்னல் போலும்
வானம் வெட்டி விட்டது
உணர்வு தளர்வு போலும்
இதயம் வெறுத்து விட்டது
வலிகள் எளிமை போலும்
இளமை சிலிர்த்து விட்டது
காதல் பொய்மை போலும்
உயிரே உதறி விட்டது
கவிதை உண்மை போலும்
விழிகள் நனைந்து விட்டது
- இராஜ்குமார்