உயிர் தரும் நினைவுகள்
வில்லம்புகள் கொண்டு
விழிப்பார்வை வீசி
விரும்பியென்
இதயம்தொட்ட
இனியவளே ...
சொல்லம்புகள் கொண்டு
கொல்லாமல் எனை
கொன்றபின்
நீ ...
சொல்லாமல்
சென்றாலென்ன ?
துண்டுகளாகிப்போன
என் இருதயம்
துயரின்றி
துடிக்குமா ?
இலைகள் தூங்கும்
பொழுதினிலும்
இதயம் தூங்க
மறுக்குதடி ..
உளவு வந்த
நிலவுகூட
நம்கதையை கேட்டு
தேயுதடி ..
பகலவனும்
பதுங்குதடி
பருவநிலவினைக்கண்டு
பயம்கொள்ளுதடி..
காற்றும் திசைமாறுதடி
கதிரவனை கண்டறிவதாய்
பொய்யொன்றை
புனையுதடி ...
வானவில்லும்
மறையுதடி
வருத்தம் தனக்குமென்று
வடிவிழக்குதடி ...
பூக்களும் வாடுதடி
புதியதாக மலர்வேனென்று
புளுகுதடி ..
இயற்கை எல்லாம்
இரங்குதடி
இறைவனுக்கே
இதயம் கலங்குதடி ..
மாற்றங்கள்
நிகழுதடி
மறைவுகள் எல்லாம்
உயிர்க்குதடி ..
புள்ளியாய்
தேய்ந்த நிலவும்
பௌர்ணமியாய்
தெரியுதடி
இருளாய்
இருந்த இரவுகள்
பகல்களாய்
மாறுதடி..
ஆனால்
பாவியுன்
இதயம் மட்டும்
ஏன் பகல்களின்றி
போனதடி ..
மண் நம்மை
தின்றாலும்
மரணம் நம்மை
வென்றாலும்..
விண் இடிந்து
வீழ்ந்தாலும்
விடியலே இல்லாது
போனாலும் ..
உயிர் தொட்ட
துடிப்புகள்
உணர்வின்றி
போகுமா ?
இரக்கமற்று போனவளே
என் உறக்கம் கொண்டு போனவளே
சுதந்திரமாய்
நான் இறந்தாலும்
சுயமாகவே
இறந்தாலும் ..
கொல்லாமல் எனை நீ
கொன்றபின்
செத்தாலும்
நான் சாவேனா ?
தூள் தூளாக இவ்வுலகம்
துரும்புகளாகி போனாலும்
மறுபடி மறுபடி
உயிர்த்தெழுவேன்...
உயிர் இன்றியும் வாழ்ந்திடுவேன்
உயிரே உன்னைமட்டும்
நினைத்துக்கொண்டால் ?
-------------------------------------------------------மறுபதிவு -- குமரேசன் கிருஷ்ணன்