துகிலாத நினைவுகள் ---------------------------- போட்டிக்கவிதை
ஜென்மங்கள்
ஏழல்ல
எழுபத்தேழாயினும்
எந்நாளும்
என் நாளில் நிறைந்திருக்கும்,
எந்நேரமும்
என்னுள்ளே நிலைத்திருக்கும் ,
உறங்காமல்
உன் நினைவுகள்.....
வசந்தமென என்
வாசல் வந்தாய் ,
வந்த அந்த நொடி முதலே
வாழ்வதன் அர்த்தம் தந்தாய்,
தந்த நிமிடங்களில்
சேர்ந்து நாம்
வாழும் நேரம்
ஏனோ நீ போனாய்
எனை விடுத்து தூரம்.....
துகிலாமல் துடிக்கும் உன்
நினைவுகளால் தான்
துயிலாமல் துடிக்கிறது
என் இதயம் இன்னமும்.....
போகும் பாதை
தூரமில்லை எனக்கு !
உடன் பயணிக்க
உன் நினைவிருக்கும் வரை...
உள்ளம் நெகிழ்கிறது ,
உன்னோடு நான்
கடந்த நிகழ்வுகளின்
நினைவுகள் மலர்கையிலே.....
வலியால் என்
விழி இரண்டும்
நனையும் நேரம்
வளியாய் வந்தென்
ஈரம் துடைக்கும்
ஆறுதல் கவிதையாக வருவதும்
உன் நினைவு....
மனம் மகிழ்ந்து
உவகையில் என்
உளமது நெகிழ்கையிலே
இதழ் பதியும்
புன்னகையாக மலர்வதும்
உன் நினைவு....
என் உணர்வுகளின்
ஒட்டுமொத்த உருவமாக ,
நான் வாழும்
உலகமாக
ஊனோடு உயிராக ,
வாழ்வதும் உன் நினைவு...
நான் என்
விழி திறவா
வேளையிலும் , -தன்
விழி திறக்கும் ,
எனக்காகவே
விழித்திருக்கும்
துகிலாத (உன்) நினைவுகள்
என் நெஞ்சினிலே.....
சீ. கவிதா .
முதுகலை உளவியல் முதலாம் ஆண்டு ,
அரசு கலைக் கல்லூரி , கோவை.