நின் எண்ணத் துகள்கள்

தென்றலாய் வருடிக் கொடுக்கும்
உன் தங்க விரல்கள்,
எப்போதும்....
புன்னகை மாறா உன் நிலா முகம்,
தொடாமல் தொட்டுச் செல்லும் உன் தாவணி முனை,
எனைப் பார்த்து..
நீ மறைந்து கொள்ளும் போதெல்லாம்,
உன்னை எனக்குக் காட்டிக் கொடுக்கும்
கொலுசு மணிகளுடன் கூடிய அந்த பிஞ்சு பாதங்கள்.
தொடும் தூரத்தில் நீ இருந்தாலும்,
தொடாமல் உள்ளூர உறுத்திக் கொண்டிருக்கும்
அந்த இனிமை நினைவுகள்...!

இவையனைத்தும் மீண்டும் ஒரு முறையாவது,
எனக்குத் தந்து செல்வாயா என் தேவதையே...!
காத்திருக்கிறேன்...
கற்பனைகளோடும், கனத்த இதயத்தோடும்...!

நீ... என்னையும் இம்மண்ணையும் விட்டுப் போனாலும்,
என்றென்றும் என் நினைவுகளை
விட்டு நீங்க போவதில்லை...!
இது எப்போதுமே மாறாது, சமுத்திரத்தில் கரைக்கப்படும்,
என் சாம்பலின் கடைசித் துகள்கள் வரை...!

எழுதியவர் : நின்னைச் சரணடைந்தேன் (31-Oct-14, 10:37 pm)
பார்வை : 116

மேலே