உருக வைக்கும் ஒரு நினைவு.

கண்ணிலே நீர்வடிந்தால் கவலை எல்லாம் போய்விடுமா?
பெண்ணிலே பலவிதங்கள் பெருமையாய் பேசிடலாம்
விண்ணிலே முழுநிலவு, விழியிலே கருநிலவு.
மண்ணிலே பெண்ணிலவு மருகியே வாடுதம்மா.
தன்னிலே ஒரு நினவு தவித்திட வைக்குதம்மா.
உன்னிலே உருகவைக்கும் உண்மைதான் என்னவென்று
என்னிலே உன்னிலையை எடுத்துரைக்க மாட்டாயோ. .

எழுதியவர் : பவானி மைந்தன். (2-Apr-11, 11:21 pm)
பார்வை : 434

மேலே