கவித்திறன் காட்டலில் கடமை ஒன்று.
கவித்திரங்காட்டலுக்கு கடமையினை தேர்ந்து இட்டார் ஓர்நாள்
கடமையினை சொல்வதற்கு காலமிங்கே போதாது - எனினும்
கவிஞனின் கடமை ஒன்றை கனிவுடன் கூறியதை கூறுகின்றேன்.
சந்தமிகு முத்தமிழின் சரித்திரத்தை நாமிங்கே - சந்தம் கொண்டு,
சொந்தமிகு சொற்களினால் சொற்புலம்பல் ஏதுமின்றி - சொற்ப நேரம்,
அந்தரமாய் மேடையிலே அரும்புகின்ற எண்ணங்களை, - அலசி ஆய்ந்து,
சுந்தரமாய் சொல்லுவது சொர்க்கவிதை என்பதுவாம் - சொல்லும் போதே
யந்திரமாய் இருப்பவர்கள் யாவருமே அக்கணத்தில் இன்பம்கொள்வர்.
தந்திரமாய் அவர் மனதை தமிழுக்கு ஈர்ப்பதுவே கவிஞன் கடமை. .