நானும் ஓர் ரசிகன்........................................

மட்டைப்பந்து விளையாட்டு
படித்தவன் முதல்
படிக்காதவன் வரை
உச்சரிக்கும் ஒரு சொல்
இந்த விளையாட்டுக்கு
பலபேர் உயிர் கொடுத்ததும் உண்டு
பல பேர் உயிர் விட்டதும் உண்டு
பல ஆண்டு விட்டு போன
உலக கோப்பையை தேடிய
இந்திய மட்டைப்பந்து
விளையாட்டு அணியின்
கனவு பலித்தது இன்று
பட்டி தொட்டி எங்கும்
திரும்பிய இடமெல்லாம்
வெற்றியின் மகிழ்ச்சி
நான் இந்தியன் என்று மார்போடு
தட்டி சொல்லும் புகழ்ச்சி
இந்திய அணியின் கையில்
உலக கோப்பை வந்தடைந்த
ஒரு நொடி ஆனந்த கண்ணீர்
சிறு குழந்தை முதல்
மட்டைபந்து விளையாட்டு என்றால்
என்னவென்றே தெரியாத முதியோர் வரை
ஊரெங்கும் வான வேடிக்கை
இறைவனுக்கு பாலபிசேகம்
தெருவெல்லாம் சரவெடி
இலசுகலேல்லாம் கரகோசம்
இன்னும் தெளியவில்லை
வெற்றியின் மகிழ்ச்சி
இன்னும் தொடந்து கொண்டே இருக்கும்
இந்திய மட்டைப்பந்து அணியின்
வெற்றி...............................
இப்படிக்கு.................................ரசிகன்