நட்பின் சான்று - நண்பனுக்காக

நண்பா,
நாம் சேர்ந்து பழகிய நாட்களோ சில,
பிரிந்தும் மறவாத நாட்களோ பல !!
.
காதலிக்க கூட அனுமதி கேட்டாயே
மரணிக்க அனுமதி கேட்க மறந்தாயோ !!
.
நான் என்ன செய்வேன் நண்பா ??
.
அண்ணா என்று காட்டியனைக்கும் உன் சிறு தங்கை கேட்பாளே ,
அண்ணா எங்கே என்று ??
.
அன்பை பரிசளித்த உன் காதலி கேட்பாளே
என் காதலன் எங்கே என்று??
.
ஒன்றாய் உணவு பரிமாறிய நம் அன்னை கேட்பாளே
என் மகன் எங்கே என்று??
.
உன்னை தேடி வந்தால் நீ இருக்கும் இடம் காட்டுமே
உன் செல்ல நாய் ,
இனி யாரை காட்டுமோ?? அந்த வாய் இல்ல ஜீவன் !!
.
மேகம் மறைத்த வானவில்லாய்
வார்த்தை மறைத்து நிற்கிறது என் கண்ணீர் துளிகள் !!
.
கண்ணீர் வடித்த இமைகள் இன்று கரை தட்டி நிற்கிறது
நீ இல்லா வெறுமையை காண பிடிக்காது !!
.
நாடு வானில் கீறலாய் இந்த மின்னல்
என் இதயத்தின் சாரலாய் என் நண்பன் !!
.
"நட்பின் சான்றாய் " என்றும் அழியா அவன் நினைவுகள் !!!
.
M.ARAVINTH,
BE- MECHANICAL FINAL YEAR,
C.S.I INSTITUTE OF TECHNOLOGY
THOVALAI - 629302
KANYAKUMARI DISTRICT
.
MY CONTACT
MOB NO; 9043932759