யாதும் ஊரே யாவரும்

எவ்வூர் சென்றாலும்
என்னை ஒரு
நிழல் ஒட்டிக்கொள்கிறது...

நிழல் என்னிடம்
நிஜம் தேடுவதாயிருப்பின்
நம்மூராகிப்
போய்விடுகிறது அது....!!

நிழலிடம் நான்
அண்டுவதாய் தெரிந்தால்
அந்நொடியே
நிழல் பிரிதலும்
சாத்தியமாகிறது......

என் ஊர் திரும்பினாலும்
பிழைக்கச்
சென்றவனாய்
பரிகசிக்கப் படுகிறேன்..

கொஞ்சம் தள்ளி
தஞ்சமடைந்தால் பிழைப்புதேடிய
வந்தேறியாகிறேன்....

ஏலியன் தேசங்களுக்கு
சென்றுவிடலாம்...

ஒருவேளை
ஏலியன்கள் என்னை
ஒரு கிரகத்துக்கே சொந்தமாக்கி
வினவக் கூடும்...!

நீ பூமியிலிருந்து
வந்தவனா....?

எழுதியவர் : நல்லை.சரவணா (1-Nov-14, 5:50 pm)
பார்வை : 146

மேலே