நம் நிம்மதி நம் கையில்

உயர்ந்த தென்னையை பார்த்து
ரோஜா பொறாமைப்பட்டால்
அது மணம் தரும்
மலர் தர முடியுமா??..

அழகிய மயில் தோகையை பார்த்து
துடைப்பம் தலை கவிழ்ந்தால்
வீடு சுத்தம் ஆகுமா??...

ஆர்ப்பரித்து வெகுண்டெழும்
கடலலையை பார்த்து
ஆற்று நீர் வருத்தப்பட்டால்
குடிக்க தண்ணீர் கிடைக்குமா??

உயர்ந்த மெத்தை படுக்கையை பார்த்து
பாய் பொறாமை கொண்டால்
ஏழை உறங்க முடியுமா??

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இடம்...
இருக்கும் இடமே உயர்ந்த இடம்
இல்லாத ஒன்றை நினைத்து
ஏங்குவதை விட....

அவரவர் வாழ்க்கை அவரவர் மன நிறைவில்
நம் நிம்மதி நம் கையில்.....

எழுதியவர் : சாந்தி ராஜி (1-Nov-14, 3:59 pm)
பார்வை : 404

மேலே