நடப்பும் நினைப்பும்

கனவிலும் காண முடியாதென்பது
நடப்பிலே காண முடியும் கற்பனை திறன் இருந்தால்
சிந்தனைக்கும் எட்டாது எனப்படுவது
சந்திக்கும் காலம் வரும் நம்பிக்கை ஒன்று இருந்தால்
மரணம் தான் முடிவு என்ற நிலைகூட
மாறி வாழும் திறன் பெருகும் அன்பும் பரிவும் பெற்றால்
இருட்டு என்று ஒன்றில்லை எந்த இடத்திலும்
வெளிச்சம் இல்லை என்பதுதான் உண்மை நிலை
பகை எனும் இருட்டுக்கு எங்கும் இடமில்லை
மனிதத்துவம் மக்களின் மத்தியில் பரவும் நிலை
நடப்பிற்கும் நினைப்பிற்கும் பாலம் அமைப்போம்
நல்லன மட்டும்தான் அரங்கேறும் நிலை சமைப்போம்

எழுதியவர் : கார்முகில் (1-Nov-14, 6:05 pm)
சேர்த்தது : karmugil
பார்வை : 62

மேலே