இறப்பிலும் சபிப்பான்

பசுமையான
புல்வெளிகளும்
பறந்து விரிந்த
வயல்வரப்பும்

தலைவணங்கா
பனை மரங்களும்
சரித்திரம் பேசும்
வணக்கஸ்தலங்களும்

தங்க தமிழன் என
தலைகுனியா வீரன் என
மார்தட்டி பேசிய
யாழ் மண்தனில்

தற்கொலைகளும்
தரம்கெட்ட செயல்களும்
தலைவிரித்தாடும்
நிலைகண்டால்

எதிரியை அழித்திட
இன்னுயிர் கொடுத்த
என் தமிழன்
இறப்பிலும் சபிப்பான்
உங்களை .....!!!

எழுதியவர் : கயல்விழி (1-Nov-14, 6:43 pm)
பார்வை : 96

மேலே