பொன் நகை
உங்கள் முகம் மிக பிரகாசமாய்
மிளிர வேண்டும் தானே
கண்ணாடியினில் பிரதி பிம்பம்
ஜொலிக்க ஆர்வம் தானே
நண்பர்கள் என்ன விசேஷம் என
கேட்பதும் விருப்பம் தானே
பொது இடத்தில் தெரியாத சிலர் கூட
எதிர் புன்னகை உதிர்ப்பது போலே
உடலில் அசதி மிகும் நேரத்தில் கூட
உற்சாகம் ஊரும் மருந்து போலே
உலகெங்கும் நடக்கும் செயல்பாடுகளின்
விந்தை தெளிவாக உணர்வது போல
ஒரு மாயை போன்ற உண்மை நிலை
ஓருநாள் பொழுது அனுபவிக்க
பல நாள் மாறாது உடன் இருக்கும் நிலை
நிறைவேற நிலை பெற்று தழைக்க
ஒரே ஒரு மந்திரம் தந்திரம் மாய எந்திரம்
புன்னகை ஒன்றை தவிர வேறில்லை