உயிரானவளுக்கு
பெண்ணே உன் கூந்தல் மீது நான் வைத்த பார்வை என்னை கண்டதும் சிரித்தது அந்த ஒற்றை ரோஜா
எப்போதும் காதுக்குள் கேட்கின்றன
உன் சிரிப்பொலிகள்
இந்த நொடி இந்த நொடி என
ஒவ்வொரு நொடியும் நீ பார்கிறாயா என உன்னையே பார்கின்றன என் விழிகள்
உன்னை கண்டவுடன் கண்கள் செயலிழந்துவிட்டன
இமைப்பதுமில்லை
உறங்குவதுமில்லை
அத்தனை பெண்களிலும்
உன்னை மட்டும் பார்க்க
பழகிக்கொண்டன என்
கண்கள்
நான் இருவராக மாறி
இருவரும் இறந்து
இரண்டு பேரையும் புதைக்க வேண்டும்
உன் கன்னக்குழிகளில்
உன் பிளவுற்ற நாடி
களவு கொண்டது என்னை
உன் பெயரை தமிழை போல்
நேசிக்கிறேன்
முதல் எழுத்து 'அ' என்பதால்
என்ன புண்ணியம் செய்ததோ
தெரியவில்லை
எப்போதும் உன் கைகளிலும்
அடிக்கடி உன்
முகத்தையும்
முத்தமிடுகிறது
கைக்குட்டை
இன்னமும் தேடி
கொண்டிருக்கிறேன் உனக்குள்
வாழ்ந்து விட்டு
பறந்து விட்ட
காற்றை
நீ
அழுவதை பார்த்ததிலிருந்து
பிடிக்கவில்லை
எந்த
அருவியையும்
கண்ணை பறிக்கும்
காதலி
என்னைக்கண்டால் ஒரு
நொடியேனும் காதலி...