வந்து போகும் நினைவுகள்
அடர் வனத்தில் பூச்சிகள்
என்னோடு பேசிய ஓசை
பூவிதழ் நாணல்
மெல்லிய கசங்கல்
துலங்கலின் மயக்கம்
என் மனம் தொட்ட
உன் மெல்லிய
சுகந்தம்
கை பிடியில்
நீ காட்டிய
நம்பிக்கை
இருள் விலகாத
பொழுதில்
என் இமை மூடிய
உன் விழிகளின்
வார்த்தைகள்
எல்லாம் நினைவிருக்கிறது
பிரியும் பொழுது
என்னவோ சொன்னாய்
அமுதம் தடவிய
அமில வார்த்தைகளின்
மயக்கம்
இன்னும் இருக்கிறது
மனதோடு
கேள்விகள் இருக்கிறது
நீயும் இருக்கிறாய்
பதில்கள் .....