முதிரோவியம்

எனது நண்பியின் 37 வயது அக்காவுக்காக அவள் வீட்டில் வைத்து என் சித்தி மகனின் கையெழுத்தில் சுடச் சுட

முதிரோவியம் .......

பென்சிலை உளியாக்கி வரையப்பட்ட
பெண்சிலை நான்

பக்கத்தில் படுத்திருக்கும் மயிலிறகும்
குட்டிபோட்டு விட்டது

பக்கங்களைப் புரட்டிப் பார்த்தவர்கள்
பக்கத்திலும் வரவில்லை

அழிறப்பர்களே என்னை அழித்துவிடுங்கள்
குழந்தையின் கையெழுத்து போல

ஓவியம் பழக இன்னொரு பக்கம்
வீணாகப் புரட்டப்படுகிறது

எழுதியவர் : மது மதி (3-Nov-14, 7:25 pm)
பார்வை : 336

மேலே