சித்திரம் கண் பழக்கம்

ஒற்றைப் புன்னகை
ஒற்றை மூக்குத்தி...
இரட்டை வயது...

உளியில்லை....
சிலையில்லை....
கள் வடிக்கிறது

விலையில்லை
பிழையில்லை
மழை தேடும் துளி ஒன்றில்
நீராடும் ஒரு மலரின்
வேர் துளி...

ஒற்றை சொல்லென
இரட்டைக் கிளவி.....

குளியலரைச் சுவராய்
ஆடைகளற்ற கண்களில்
ஆகாய தாமரையின்
ஒவ்வொரு தழுவலிலும்
தீராத தாகம்.....

சித்திரம் கண் பழக்கம்
நிற்காதே
சுவர் பக்கம்.....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (4-Nov-14, 4:11 pm)
பார்வை : 150

மேலே