காத்திருப்பு

என்னவனே.....
உன் முகம் காண
என்னும் போதெல்லாம்
என்னுள் ரணமே.....
உன் விழி கண்டு
என் விழியின் தவத்தை
முழுமையாக என்று முற்றுப்பெற
செய்வோனோ தெரியவில்லை ...
கடல் கடந்து சென்றாய் ....
உன் வருகையை எண்ணி
தினம் தினம் காத்திருக்கிறேன் ....
நீ அனுப்பும் குறுந்தகவலும்...
உன் ஆறுதலான வார்த்தைகளுமே
நான் வாழ முழு காரணம்....
ஊடல் கொண்டு இருவரும்
மௌன காதல் கொள்ளும் போதும்
என் மனம் உன்னை அதிகம்
நேசிப்பதை உணர்கிறேன்....
என்னை நீயும்
உன்னை நானும் சமாதனம்
செய்யும் நொடிகளில் அன்பு கலந்த
வார்த்தைகளும் சுகமான
காதலும் நம்மில்....
நாட்கள் ஒவ்வொன்றையும்
நேசிக்கிறேன் .....
உன் வரவை எண்ணி
உன்னவள் நிமிடம் ஒவ்வொன்றும்
உனக்கு மட்டுமே சொந்தம் என்பதால்...
நாளை உன் கரம் கோர்த்து
அக்னி சாட்சியாய் நம்
மணநாளை காண காத்திருக்கிறேன் ....