தனியொருவன்

பூக்களின் சாலையில்
நடக்கின்றேனா பறக்கின்றேனா?
பனிவிழும் காலையில்
நனைகின்றேனா நகர்கின்றேனா?
இரவுகளின் நீள்கையில்
இருக்கின்றேனா இறக்கின்றேனா?
தனியொருவன் நானடி
தரணியை மறந்தேனடி!
தவழ்கின்ற குழந்தையால்
தலைசாய்த்து பார்க்கிறாய்
தலைசுற்றி போகிறேன்
தடுமாற வைக்கிறாய்
முன்னாடி நடக்கிறாய்
தள்ளாடி நிற்கிறேன்
முழுநிலவாய் சிரிக்கிறாய்
முழுவதுமாய் சிலிர்க்கிறேன்
முள்ளில்லா மலராய்
முகத்திரை காட்டினாய்
முகர்ந்து பார்க்கிறேன்
முகமெல்லாம் வண்ணங்கள்
முடிவில்லா வானமா?
திரும்பாத நாட்களா?
திருவிழா காலமா?
தீ சுட்ட கனமா?
புரியாமல் தவிக்கிறேன்
புன்னகையில் கொல்லாதே...!
-ஜோர்ஜ்