ஏன் விவாகரத்து

விவாகரத்து , இன்று சர்வ சதாரனமான ஒரு விடயமாகவும் ஒரு வார்த்தையாகவும் எங்கும் காணப்படுகின்றது.1960 களில் 0.002% மாக இருந்த விவாகரத்து விண்ணப்பம் 1980இல் 0.03% மாகி 1990இல் 0.1% மாகி 2007இல் 1%மாகி இன்று 7% க்கு தமிழ்நாட்டில் வந்துள்ளது.

ஏன் இவ்வாறு அதிகரித்து செல்கின்றது? காரணம் என்ன? என்று நோக்கும் போது, இங்கு கணவன் மனைவிக்கு இடையிலான புரிந்துணர்வு குறைவும் தன் பெற்றோரைக் கண்டு கொண்ட அதிருப்தியும் தங்களுக்குள் வரும் பொறாமை மற்றும் பெருமையுமே அதிக குடும்ப பிரச்சனைகளை தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளது.

கணவன் மனைவிக்கிடையே ஏன் புரிந்துணர்வு இக்கால கட்டத்தில் குறைவாக உள்ளது? முதல் காரணம் நேரம் ஒதுக்காமை. கணவனோ மனைவியோ தனது துணைக்கென ஒரு நேரம் ஒதுக்க மறந்து விடுகின்றனர். அவர் அவர் பரஸ்பரம் மனம் விட்டு பேச ஒரு நேரம் கிடைபதில்லை. காலையில் வேலைக்கு சென்று மாலையில் அவரவர் தேவையை நிறைவேற்றி உறக்கத்தில் தன்னையே மறந்து உறங்கி வாழ்க்கையை இயந்தரமயமாக்கி விடுகின்றனர். இங்கு உணர்வுகளுக்கோ உணர்ச்சிகளுக்கோ உறவுகளுக்கோ முக்கியத்துவம் இன்றி போய்விடுகின்றது. ஒரு வேளை உணவாவது ஒன்றாக அமர்ந்து உண்பது இங்கு எத்தனை குடும்பத்தில் உள்ளது என்று பார்த்தோமானால் அது மிகக் குறைவே. ஒருவருடன் ஒருவர் மனம் விட்டு உரையாட நேரமில்லாது வாழும் போது எவ்வாறு புரிந்துணர்வு ஏற்படும்?

இவ்வாறு வாழும் ஒரு குடும்பக் குழந்தை தன் வாழ்விலும் இதையே பின்பற்ற முனையும் போது இவற்றை எதிர்பார்த்து மணக்கும் துணை, இவை கிடைக்காத பட்சத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி விவகாரத்தை நாடி செல்கின்றது. இன்றைய பெற்றோரின் நிலை நாளை, 7% இருந்து 100% க்கு விவகாரத்தை கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.

இன்னும் சிலர் தன் உழைப்பின் ஊதியம் தன் பெற்றோரின் செல்வாக்கு இதை மையமாக வைத்து மற்றவரை தாழ்த்துவது அல்லது அதன் மீது பொறமை கொள்வது அதைக்கொண்டு தன் துணை தான் விரும்பியது போன்று மட்டுமே நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்வதும் இன்னுமொரு முக்கிய காரணமாகவும் உள்ளது. தான் மணம் முடித்தார் தன்னைப்போன்று ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் உடைய சக மனிதரே என்பதை மறந்து விடுகின்றனர்.

இவர்களின் பிணக்குகளால் அவர்களின் குழந்தைகளின் வாழ்க்கை சீரழிவதையும் நடவடிக்கைகள் மாறுபட்டு தகாத பழக்கவழக்கங்களுக்கு உள்ளாகி பின் " நீ உன் தந்தைபோல உன்தாய் போல" என அவர்கள் மன தாக்கத்திற்கு உள்ளாக்க படுவதையும் இங்கு கண்கூடாக தினம் தினம் காணக்கூடியதாக உள்ளது. இது வீட்டுக்கும் நாட்டுக்கும் பெரும் சீர்கேட்டையே தந்து சீர் அற்ற சமுதாயத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.

தம்பதிகள் என்றும் நல்ல கலந்துரையாடலும் கருத்து பரிமாற்றமும் விட்டுக்கொடுப்புகளும் விடுமுறைகளை குடும்ப சகிதம் கழிப்பதும் கிடைக்கும் நேரங்களில் கணவன் மனைவி இருவரும் தனிமையாக வெளியில் சென்று வருவதும் நல்ல ஆரோக்கியமான ஒரு புரிந்துணர்வையும் நல்ல ஆரோக்கியமான வாழ்வையும் தருவதோடு நம் சுற்றுப்புற சூழலை அமைதியும் மகிழ்ச்சியுமாக மாற்றித்தரும் என்பது என் கருத்தும் எண்ணமுமாக உள்ளது. :)

என்றும் அன்புடன் -ஸ்ரீ-

எழுதியவர் : என்றும் அன்புடன் -ஸ்ரீ- (5-Nov-14, 1:25 pm)
Tanglish : aen vivaagaraththu
பார்வை : 374

சிறந்த கட்டுரைகள்

மேலே