என் முதல் ஹீரோ
தவழும் வயதில்
மடியில் ஏந்தினான்.
்துள்ளும் பருவத்தில்
உப்பு மூட்டை சுமந்தான்.
வாசலிலே தினம்
காத்திருப்பான்-எனைவீதி உலாவிற்கு கூட்டிச் சென்றிடுவான்.
காலில் சக்கரம் கட்டி சுழன்றிடுவான் -எவரும்
்குறுக்கிட்டால் எச்சரிக்கை செய்து விலக்கிடுவான்.
காற்றில் மிதக்கும்
அனுபவம் தந்திடுவான்
கருத்தாய் எனை
இல்லம் சேர்த்திடுவான்
்கார்மேக வண்ணன்
எல்லோரையும்
கவர்ந்திடுவான் - என்
கூட்டுச் சிறார்களின் பொறாமையைதூண்டிடுவான்.
இன்றும்,இளமை மாறாத
புதுப் பொலிவுடன் திகழ்கின்றான்இருப்பினும் எனக்காக விருப்பஓய்வை ரசிக்கின்றான்..
என் முதல் " ஹீரோ"!!! {அப்பாவின் “hero” சைக்கிள்}