சிற்பியே உன்னை செதுக்குகிறேன்-வித்யா

சிற்பியே உன்னை செதுக்குகிறேன்-வித்யா

பூங்காற்றில்
பூப்பெய்திய
மகரந்தம் பிடித்து

வானவீதியில்
மெல்லிசை இசைக்கும்
விண்மீன் பறித்து

ரோஜா இதழ்களில்
பூபாளம்
அமைத்து
என் வாழ்வின்
வழிநெடுகிலும்
உனைத்தூவிச்செல்வேன்...

சிலநேரம் இதழ்விரித்து
புன்னகை செய்வாய்
சிலநேரம் இமை விரிய
கோபம் கொள்வாய்
சிலநேரம் கன்னம்இறுக்கி
மௌனம் சாதிப்பாய்

என் ஏகாந்த வாழ்வின்
எல்லாசெல்களிலும்
நிறைந்திருக்கும்
சிற்பியே உனை
உளி கொண்டு எங்கனம்
செதுக்கிடுவேன் நான்..?

என்னவளே உனை...
மழைத் தூரிகைக்
கொண்டு செதுக்கிடவா..?
பூவின் மெல்லிதழ்
கொண்டு செதுக்கிடவா..?

உணர்வுப் பேரலையால்
இமைதிறக்கும் காற்றென
செதுக்கிடுவேன்......

நிழல்கள் உயிர்வாழும்
உலகொன்றின் ஒளியாய்
செதுக்கிடுவேன்.......

கட்டவிழா காமத்தின்
உயிர்முடிச்சில் காதலாய்
செதுக்கிடுவேன்........

கண்காணா உலகொன்றில்
உயிரால் உணர்ந்திட்டகருவாய்
செதுக்கிடுவேன்.....

சிற்பியை செதுக்கும்
சிலை நான்.......
உனை ஒரு போதும்
நடைபாதையில் கடைபோட்டு
விற்றிடமாட்டேன்........!!

என் நெஞ்சோடு
புதைத்துக் கொள்வேன்........!!




சிற்பி-என் கவிதைகள்
சிலை-வித்யா


-வித்யா
ME (Applied electronics)

எழுதியவர் : (5-Nov-14, 5:35 pm)
பார்வை : 406

மேலே