அமைதி அனுபவம்
யோசனை இல்லை
பேசவும் இல்லை
மனதிலே அசைபோட
விஷயம் ஒன்றும் இல்லை
மாலை பொழுது விலகி
இரவு பொழுது விடியும்
அழகை கூட ரசிக்கும்
சலனம் தேவை இல்லை
மூச்சுகாற்று கூட ஒரு
ஓசை எழுப்பும் ஆதலால்
சுவாசம் அடக்கி அமைதிக்கு
நானே காவல் வேறில்லை
ஆரவாரம் அற்பம்
அமைதியே ஆரோக்கியம்
உண்மையை உணர்ந்தபின்
உற்சாகத்திற்கு அளவில்லை
உண்ணுவதும் உறங்குவதும்
தவிர வேறறியேன் நிலைமாறி
எண்ணுவதும் எழுதுவதும்
பழகி தேறிடுவேன் மோன நிலை