இரவு

சூரியன் தன் சுவடுகள்
கரைந்து போனது

கருகிய வானம்
நிலவை சூடியது

வெள்ளி பூக்கள்
கொஞ்சம் விழி திறந்தது

மின்மினி பூச்சிகள் தம்
ஒளிகொண்டு தெருவிளக்கு
போட்டது

இரை தேடி அலைந்த
உயிரினங்கள் உறவாடி
கிடந்தது

உடல் சோம்பிகிடந்த உயிர்கள்
விழி திறந்தது வெளியானது

சொல்லாத நிசப்த்தம்
சூழ்ந்தது செவிகளில்

கூரை வீடுகளின்
குறுட்டு வெளிச்சங்கள்
கண் உறுட்டி கதை பேசியது

உறவு கொள்ளும் இளைஞருக்கும்
துறவு கொள்ளும் முனிவருக்கும்
பசித்து கிடக்கும் பாவியர்க்கும்
ருசித்து மகிழும் மன்னர்களுக்கும்
சமத்துவம் கொடுத்தது இரவு

இன்பம் துன்பம் என்பது
மாறிவரும் என்பதை உணர்த்தும்
கலைப்படைப்பு இரவு பகல்

இருளும் போது விடிவும் தொடங்கும்
விடிந்த பின்பு இருளும் அடங்கும்

எழுதியவர் : இணுவை லெனின் (6-Nov-14, 4:45 am)
சேர்த்தது : இணுவை லெனின்
Tanglish : iravu
பார்வை : 102

மேலே