வானவில்லானவள் தோழி

என்னைப்பற்றி...!

என்ற தலைப்பிற்கு
கவிதைக்காரர்கள்
எழுதிய வரிகளில் சில
மெய்சிலிர்க்க வைத்ததற்கு நடுவே..!

சொல்வதற்கு
எதுவுமே இல்லை என்று ..
எழுதி வைத்தவள்..!
என் தோழி..!

அழகும் ஆச்சரியங்களும்
நிறைந்த வரிகளுக்கு
சொந்தக்காரி..!

வார்த்தைகளை கொண்டு வானவில்லானவள்..!
என் வானத்தில் வண்ணங்களை தூவி
மின்னலானவள்..!

என் எத்தனையோ கிறுக்கல்களுக்கு
கருத்துரைத்து என் மனம்பிடிதவள்..!

அவள் முகம் பார்க்க ஆசைகொண்டு
அவளுக்காக எழுதும் முதல் கவிதை..!
இல்லை இல்லை முதல் கிறுக்கல்கள்..!
காலம் கடந்த தாமதமான அன்பு
அழகான ஆரம்பத்தில்..!

எழுதியவர் : சதுர்த்தி (7-Nov-14, 1:00 am)
பார்வை : 203

மேலே