நட்பின் சான்று - போட்டிக் கவிதை - தேன்மொழி

நட்பின் சான்று - போட்டிக் கவிதை - தேன்மொழி
------------------------------------------------------------------------

புன்னகையை காற்றில் வீசி
புதுமலரின் வாசம் வரைந்து
தென்றலை திணற வைக்கும்
மழலையின் மறுமுகமாய் நட்படி ..!

என்றும் எதிர்க்கும் விரலுக்கும்
எதிர்பாரா தருணத்தில்
எட்டாத உயரத்திலேறி யாதும்
உதவும் உருவமாய் நட்படி ..!

திமிரான குரலை தூண்டி
தினமும் திட்டுகளை தாண்டி
குதூகல குறும்புகளைக் கோதும்
குமரியின் சிறுவிரலாய் நட்படி ..!

விதைக்க தெரியாத விழிகளில்
வறண்டு எரியும் வயலையும்
அலை அலையாய் நனைக்கும்
அற்புத உணர்வாய் நட்படி ..!

உனையிழந்து நெஞ்சம் உடைய
உறவும் ஒதுக்கிய கணத்தில்
உள்ளுணர்வில் உனக்காய் நிற்கும்
இதயத்தின் துடிப்பாய் நட்படி ..!

விரும்பும் விசித்திர தேடலை
விரட்டிப் பிடித்து துரத்த
விடிய விடிய விழி திறக்கும்
ஒளியின் சுடராய் நட்படி ..!

பொறுமையிழந்த பொழுதுகளில்
உரிமையோடு உனையறிந்து
நரம்பிலும் நாம் நடப்போமெனும்
போர்வையின் தேகமாய் நட்படி ..!

அச்சம் அதட்டிய இரவுகளில்
அன்பின் அழகு அரவணைப்பை
பயத்தின் பகுதியில் பரப்பும்
பக்குவத்தின் பலமாய் நட்படி ..!

உலகத்தை முற்றும் உணர்ந்து
மலரத் துடிக்கும் மனிதத்தை
வளர்க்க நினைக்கும் உனது
உயிரின் நகலே நட்படி ..!

-- தேன்மொழி . B.E.
இளநிலை கட்டிட பொறியியல்
சூர்யா பொறியியல் கல்லூரி
ஈரோடு .

எழுதியவர் : தேன்மொழி (7-Nov-14, 6:47 am)
பார்வை : 186

மேலே