காதலின் பிரிவு ஒரு பெண்ணின் சோகத்தில்
உயிரும் பிரியவில்லை
துயரம் கலையவில்லை
நீ இல்லா உலகம் எனக்கில்லை
தனிமையில் முழ்கவே
காயமில்லா வலியே
மருந்தாய் நீ எங்கே.....
நீயும் நானும் பேசியது
காற்றினில் ஒன்றாய் போகுதே
ஏனடா நாம் பிரிந்தோமே...
கண் இரண்டும் அழுகவே
புதிய நதி என் பெயரிலே.
போதும்டா நீ பாராமல்
என் உயிரை கொன்றது
மச்சமளவு உயிராவது மிச்சம் வையடா உன் கூட வாழ
என் மொழியே உன் பெயர்தானடா
உன் மொழியில் என் பெயர் எங்கடா
படைத்த கடவுள் கதறுதே
என் நிலைமை புரிந்து
தடுத்து விடு கடவளின் கதறலை.
உன்னை நினைத்து நினைத்து உருக
உனது உயிர் என்னுடன் இருக்க
நீ துரும்பாய் இளைக்க நான் பாவியாகிறேன்.
அவஸ்த்தையான காதலில் அலைய விடுகிறாயே
காதலும் பொங்கி நிற்குதே கடலலையாய்....
உனக்காக காத்திருக்கும் ஒரு நொடியும் ஏழு ஜென்மம் ஆகுதடா
வந்து விடு என்னை சேர்ந்து விடு
ஒரு ஜென்மம் என் கூட வாழ்ந்து விடு...