புதிய உணவு

பழைய சோறும் கேப்பை கூழும்
மறந்து போன மக்களுக்கு
புதிய புதிய உணவு வகை
கலந்து கட்டி உண்பதற்கு
வாழ்க்கை முறை மாறியதால்
சொந்த செலவில் சூனியமே
வைத்துக் கொள்ளும் நிலை வந்ததே!
மருத்துவத்தின் முன்னேற்றம்
ஆயுளையே அதிகப் படுத்தும்
வசதியினை பெற்றவர்கள்
முறையில்லாத உணவருந்தி
பல நோய்களையே நாடுவதேன்?
சுத்தம் சோறு போடும்
என்றுரைப்பார் நம் முன்னோர்
அதை சுத்தமாக தூக்கிப் போட்டு
சுற்றுகிறார் எங்கணுமே
வீட்டு சமையல் கூட
வெறுத்திட்டே வீதியெங்கும் சுற்றுகிறார்!
பசித்து புசியென்று
சொல்லி வைத்தார் முன்னோர்
பசிப்பதற்க்கு மருந்து
புசிக்கின்றார் புவியிலுள்ளோர்
அவர்க்கெல்லாம் பீட்சாவும்
பர்கருமே ..போதும் தினம் தினமே!