தனிமை
ராஜ்ஜியத்தில் வளமுண்டு
மக்களுக்குப் பஞ்சம் - வேண்டும்
பூஜ்ஜியமாய் வாழ்ந்துவரும்
மன்னனுக்குத் தஞ்சம்...
ஆளில்லா உலகத்தில்
நித்திரைகள் எங்கே - வெறும்
தாளிங்கே அழகுறுக்கும்
சித்திரங்கள் எங்கே..
நீரில்லா வேருக்கு
நிலத்துடனே பிரிவு - வெண்
நிலவில்லா விண்ணிற்கு
மீன்கள்தான் பரிவு...
உணர்வுகளைப் பரிசளிக்கும்
உள்ளங்களும் எங்கே - தனிமை
வாரித்தந்துப் பரிகசிக்கும்
வள்ளல்களும் இங்கே...
மாபெரும் நூலகத்தில்
இந்நூலும்தான் தனியோ - அந்த
நூலந்த நூலாவதே
இறைவன் செய்த விதியோ...