பிரம்மம்
எதை தேடுகிறீர்கள்,
கனவுகளை களவாடும் கண்களை கொண்டு..
கண்ணீரில் கரைந்திருக்க கூடும்
கருணையற்றிருக்கும்
உங்களது கடந்தகாலம்..!!
கடவுளேனும் அறிந்திருக்க கூடும்
காத்திருக்கவைக்கும்
உங்களதுஎதிர்காலம்..!!
மன்னிக்க;
நிச்சியமாக இல்லை இங்கு,
உங்களுக்கான உடமை ஒன்று..!
கவலை வேண்டாம்;
கால சந்தையில் காணாமல் போன
நம்பிக்கை குழந்தைகள் ஆயிரம்ஆயிரம்..!!
உணருங்கள்;முடிவாய்..
உண்மையை உரிமை
கொண்டாட யாருக்கும் இல்லை
ஒரு அதிகாரம்..!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
