தைரியசாலி
எனக்கும் உனக்கும் இடையிலே
முளைத்த வில்லனவன் தொடையிலே
வண்டுகள் குடைந்திட வேண்டுமே ..
விண்ணென வலித்திடும் போதிலே
விரைந்து வருவேன் மகிழவே !
என்னைக் காண்பதை தடுத்திடும்
செயலை செய்தவன் யாரென
சொல்லிட வேண்டும் நாயகி
ஐயோ அவன் உன் மாமனா ..
அருவா மீசைக் காரனா ..
மதுரை வீரன் சாமி போல்
மயங்காதிருக்கும் வீரனா ..
ஏண்டியம்மா கோமளம் ..
இத முன்னமே ஏண்டி சொல்லல ..
தெரியாதெனக்கு சங்கதி
தெரிஞ்ச பின்னால் நீ தங்கச்சி..
எப்பவுமே நான் அவன் கட்சி !
என்று சொல்லிடும் பரம்பரை நானில்லை!
பிருதிவி ராசனை போலவே
கடத்திடுவேண்டீ உன்னையே !
கலாய்க்காதேடி ... என் கள்ளியே !