உயிரை உடைக்கும் உணர்வாய் - இராஜ்குமார்

உயிரை உடைக்கும் உணர்வாய்
==============================

உந்தன் உள்ளங்கால்
உரசிய மண்துகள்
மயங்கி மயங்கி - தென்றல்
காற்றில் பறக்க துடிக்குதடி ..!

உந்தன் நகத்தை
வீசிய அவ்விடம்
தினம் தினம் - இரவில்
விண்ணை பார்த்து சிரிக்குதடி ..!

உந்தன் குரலை
கொஞ்சிய மலரிதழ்
தயங்கி தயங்கி - தரையில்
விழுந்தும் வாடாமல் மலருதடி ..!

உந்தன் வீட்டை
தேடிய பறவையின் சிறகு
உயர்ந்து உயர்ந்து - வானின்
மேகத்தை மெதுவாய் திட்டுதடி ..!

உந்தன் தொட்டிலில்
உறங்கும் கனவுகளும்
மிதந்து மிதந்து - இன்றைய
பகலை இருளாய் காட்டுதடி ..!

உந்தன் அறையில்
அலையும் காற்றும்
அசைந்து அசைந்து - சன்னல்
திரையில் வாழ நினைக்குதடி ..!

உந்தன் விரல்கள்
எழுதிய கவிகள்
மிளிர்ந்து மிளிர்ந்து - உயிரை
உடைக்கும் உணர்வாய் உலவுதடி ..!

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (8-Nov-14, 8:45 pm)
பார்வை : 582

மேலே