இதயப் பெட்டகம்
எனக்காகப் பிறந்த முல்லை
மலர் இவள்தினம் தோறும்
பறிப்பாள் குண்டு மல்லி..♥
இவள் விழி இரண்டும்
மின் ஒளியை கடன்
வாங்கியது போல்
கடும் பவர்.
அந்தக் கண்ணுக்காகவே
தவம் இருப்பவன் இவன்..♥
பிண்ணி முடித்த சடை மேலே
பச்சைத் துணியால் கட்டி
எடுத்து விட்டாள் முன்பக்கமாகவே.♥
இச்சை கூட்டும் எண்ணங்கள்
எழும் தன்னாலே அதை சேமித்து
வைத்துள்ளேன் நான் என்நாளும்..♥
பஞ்ச வண்ணக் கிளிபோல்
இவள் ஆடை என் உள் மனம்
ஆடுது ஒயில் ஆட்டம் ஆசையில்..!!
இவள் கழுத்துக்கு சங்கு
மணி மாலை பொருத்தம் இல்லை
நான் முத்தங்களால் போடுவேன்
பின் ஒரு நாள் மாலை ..♥
காதோரச் சிமிக்கி கதை கதையாக
சொல்கின்றது கனவிலும் என்
கண்ணத்தைக் கிள்ளுகின்றது..!!
வளையல் போட்ட கை இரண்டையும்
மெதுவாக நான் பிடித்து
இழுக்க வேண்டும் நொறுங்கும்
வளையல்களை நீ வெட்கத்துடன்
எடுக்கவேண்டும் ..♥
சிணுங்கும் கொலுசும் நீ
மாட்டி வர வேண்டும் என்
காலும் அதனுடன் சிலுமிசம்
பண்ண வேண்டும்...♥
நீ சரம் முடித்த மலர்
கொண்டு நான் உன்
கார்மேகக் கூந்தல்
மேல் சூட வேண்டும்
பொங்கும் வெள்ளை
நுரை அலங்கரித்தது
போல் காட்சி தரவேண்டும்..♥
இத்தனை ஆசைகளை அடுக்கி
அடுக்கி வைக்கின்றேன் என்
இதயப் பெட்டகத்தில்..♥
நீ மட்டும் தரை நோக்கும்
உன் விழியால் என்னை
நோக்குவதேயில்லையடி
காலையிலே தவறாது
திண்ணையிலே வந்து
அமர்ந்து என்னைக்
கொல்லாமல் கொல்கின்றாய்
ஏனடிபெண்ணே....♥