ஸ்ரீ ராமா
![](https://eluthu.com/images/loading.gif)
புருஷ உதாரணம்
ஜகதோட்காரணம்
ராமா ஸ்ரீ ராமா
ஜெயராமா ரகுராமா
ரகுவம்சத்தின் புண்ணிய அவதாரம்
தசரதன் கோசலைக்கு மகனாகும்
பரதன் லக்ஷ்மணன் சகோதரன்
கௌஷிகனின் சிறந்த மாணவன்
அகல்யைக்கு இவரால் விமோசனம்
சுயம்வரத்தில் சிவதனுசை உடைத்தும்
சீதைக்கு அற்புதமான காதல் வரம்
ஏகபத்தினி விரததிற்கு உதாரணம்
புருஷன் மனைவி எடுத்துகாட்டும்
குகனுக்கு நட்பின் சிறப்பை காட்டும்
அனுமனுக்கு பெருமை கூட்டும்
மனித குலத்தின் மரபின் ஏற்றம்
விபீஷணனுக்கு அடைக்கலம்
சுக்ரிவனுக்கு அனுதாபம்
இலங்கைக்கு கடலில் பாலம்
இராவணனுக்கு நல்ல பாடம்
எத்தனை எத்தனை சிறப்பு ராமா
எத்தனை எத்தனை சிறப்பு ராமா
ராமா ஸ்ரீ ராமா
ஜெயராமா ரகுராமா