வரைப்பட் டிகை மின்கணினி - நேரிசை வெண்பாக்கள்

வரைப்பட் டிகைஎன்னும் ஓர்வகையாம்; சின்ன
திரைபோன்ற மின்கணினி; தூக்கி - துரைமார்கள்
பார்க்க மிகஎளிது; பச்சைக் குழந்தையும்
பார்க்க அதுதான் எளிது! 1

பேரனும் பேத்தியும் கேம்ஸ்ஆ டிடவும்,எந்
நேரமும் பாட்டுக்கள் யூட்யூபில் - ஆரவார
மாய்ப்பா டுவதையும் கேட்டிடவே தோதான
தாய்நல் 'வரைப்பட் டிகை'! 2

வரைப்பட் டிகைஎன்னும் மின்கணினி மூலம்
திரையில் வலைத்தேடல் செய்தே - அரைநிமிடத்
தேடலில் நம்த மிழருவி யார்உரை
யாடலை யும்கேட் கலாம்! 3


குறிப்பு:

என் இரண்டு மகன்களிடமும் இருக்கிறது 'Tablet, IPad ' என்னும் மின்கணினி.
இதற்கு தமிழில் 'வரைப்பட்டிகை' என்ற பெயரை கலைஞர் சொல்லியிருக்கிறார்.
எனவே வரைப்பட்டிகை பற்றிய மூன்று நேரிசை வெண்பாக்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Nov-14, 9:01 pm)
பார்வை : 64

மேலே