தமிழே - வெண்டாழிசை
அழகுத் தமிழே அமுதே உயிரே
பழகத் திகட்டா பசுமை மொழியே
எழவை எனையே தினம் .
வற்றா வளமும் வரமென வாய்த்திட்ட
நற்றாய் உனையே நலமுடன் போற்றிட
பெற்றாய் மகிழ்வேன் பெரிது.
செவியின்பம் தாராளம் சேர்த்திடுவாய் நீயே
கவியின்பம் நான்பாட கைவசமும் ஆனாய்
புவியுன்னைப் போற்றும் நிதம் .