மெல்லத் தமிழ் இனி

''மெல்லத் தமிழ் இனி''


அரம்பை போன்று வாழ்ந்த மொழி
இன்று அவலம் கண்டு போனதே !

குலவாடிய பேச்சுக்கள், குரலற்று போனதே !
குழவிக்கல் கொண்டு குவலயம் சிதைந்ததோ ?

கூற்றுவனின் அரைக்கூவல்,
கூப்பாடு போட்டிட,
மார்புடைத்த தமிழ் மொழிக்கு,
கெக்கிலியோ கவுரவம்?

தேம்பாவாணிப் பாட்டுகள் ,
தேய்ப்பிறையாய் போகிடுதே,
என்று தேம்பியவருள் நானும் ஒருவன்....

தணல் கொண்ட தமிழ் வார்த்தைகள்
தண்டனை பெற்று தவிக்கிறததே !
தமிழியல் படித்தவன் தரை அடியில் தவிக்கிறான்,
தர்க்கு கொண்டு வந்தவன்
தரை ஆள துடிக்கிறான் ,

சுரங்கத்தில் மறைந்த கரை ஓவியமாய் போனது ,
எம் தமிழ்மொழியின் தலைக்கவசம்........

தனிமம் கொண்டவை , தமிழும், என் சிந்தையும்
தனத்தால் வாங்கிடலாகாது ...
தனயனிடம் தாயை கொல்லும் மனம் இல்லை ,
தனிமை போக விட மாட்டோம் எம்
தமிழை ,

புயம் கொண்டு சுமந்திடுவோம்
நாங்கள் ..
தாயை சுமக்க பிள்ளைக்கு கிடைத்த
இத்தருணத்தில் ,
தாலாட்டும் விதமாய் ...

-அந்தோனி ஜெயராஜ் .சு .வி

எழுதியவர் : அந்தோனி ஜெயராஜ் .சு .வி (10-Nov-14, 1:58 pm)
Tanglish : mellath thamizh ini
பார்வை : 169

மேலே