அங்கீகாரம்

அர்த்தம் அற்று
தர்க்கம் செய்யாதே
அதட்டினாள் தோழி

அமைதியாய் போக நான்
என்ன விழுங்கினேன்
வார்த்தைகளை

அர்த்தம் இன்றி
அடைக்கப்பட்ட என்
உறவுகளை பார்வையிட
அரச அங்கீகாரம் வேண்டுமாம்

அட நாய்களே
அரசாங்கம் நீங்களடா
இன்று அடிமைகளாய்
நாங்களடா
எங்கே கிடைக்கும் அங்கீகாரம்

அங்கீகாரம் பெறுவோம் ஒருநாள்
உன்னை அடிமை படுத்த அல்ல
எம் தமிழினம் தலை நிமிர்ந்து
நடக்க..!!

எழுதியவர் : கயல்விழி (9-Nov-14, 10:24 am)
Tanglish : ankeekaaram
பார்வை : 140

மேலே