உனக்கு புரிகிறதா

உனக்கு புரிகிறதா?..

உலகில் காதலர்கள் எல்லாம்
பேசிக்கொள்ளும் ஒரே மொழி
மௌனம்!..

நீ கண் அசைத்தால்
இடிந்து போகிறது
என் இதயம்!..

என் இரவுகளுக்கு
தானம் செய்கிறேன்
உன் நினைவுகளை!..

என் கண்கள்
பேசும் பாசை
உனக்கு புரிகிறதா?..

என் விழிகள் வரைகிறது
ஆயிரம் மடல்கள்
உனக்காகவே!..

புதிதாய் மலர்கிறது
என் கண்கள்
உன்னை காணும் போதெல்லாம்!..

கனவுகளை மட்டும் ஓட விட்டு
என் கண்களை
திருடிக் கொண்டாய்!..

என் கனவில்
அஞ்சலிட்ட கடிதம்
உன்னை வந்து சேர்ந்ததா?..

என் கண்கள்
அடிக்கடி பிரசவிக்கிறது
கண்ணீரை மட்டும் தான்!..

மு.அ.மு முர்சித் (இலக்கியன்)

எழுதியவர் : மு.அ.மு முர்சித் (இலக்கியன (10-Nov-14, 12:00 pm)
Tanglish : unaku purigirathaa
பார்வை : 109

மேலே