எதிரொலி

தீதும் நன்றும் பிறர் தர வாரா
என்றவனே தமிழா
தீதென்றும் நன்றென்றும் பகுத்தறிய
தெரியாமல் போனதேனோ
நானறியேன்!!!

நன்றைத் தீதென்றும் தீதை நன்றென்றும்
நினைத்துக் கொண்டு வேறு பாதை வழி
செல்வதேனோ
நானறியேன்!!!

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
அது அந்த காலம்
நீ செய்த தற்கு நிச்சயம் அறுவடை செய்வாய்
இது இந்த காலம்

நீ செய்தது நன்றேன்றால் அறுவடையும் நன்றாக
அமையும்
தீதென்றால் அறுவடையும் தீதா கவே அமையும்
இதுவே இயற்கையின் நியதி

என்றும் உன் பாதையை மாற்றிடாதே
அதன் பின் நடப்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

எனவே, எதிலும் ஜாக்கிரதையாக இரு தமிழா!!!
ஜாக்கிரதையாக இரு!!!

காலத்துடனும் நேரத்துடனும் போட்டி போட்டு
முன்னேறிவிடு!
நீ தூங்கும் போதும் ஒரு கண்ணை மூடாதிரு!!!
என்றான் ஒரு கவிஞன்
அதுவே நிஜம்!!!

எழுதியவர் : புரந்தர (10-Nov-14, 6:13 pm)
பார்வை : 96

மேலே