மயக்க நிலையில் மாண்டுகிடக்கும் கனவின் சூளுரை
சூளுரை அழுத்தத்தால்
மயக்கங்aகள் அங்கே
மௌன மரணம்!
காஞ்சனையின் கடை
விழியையும்
கொய்து போகும்
காளையன் மூர்க்கம்!
கருகிப் போகும்
போர்க்குற்றம்-அதன்
கங்கெடுத்து காய்ச்சி
குடிக்கும்
மலைநாட்டின்கொற்றம்!
வாளின் நுனியைக்
கண்டும்
வயொதி யாகும்
தோட்டாக்கள்!
அம்மணக்கத்திகளின்
ஆடை, இரத்தம்!
வீரத்தின் ஆன்மாக்கள்
அடர்த்தியாகும்
நெருக்கடிகள்!
இலக்கியத்தின் வெட்டி
ஒட்டப்பட்ட கைகள்,u
அதில்
கசியும் இரத்தமும் பேசும்,
தீர்க்க ஆவேசம்!
(இப்படிஎழுத வைத்த காதலி...)
எடையிழந்து
உடையும் நிலம்!
வசையால் வலுவிழந்த
ஓசைப்புயம்!
கயமை கண்டு
காய்ந்து போன
பாலை விருட்சம்!
நீதிகேட்டு சாகும்
நிராயுதவர்க்கம்!
இலக்கியத்தின்
வெட்டப்பட்ட கைகள்
வீதியில்
ஒப்பாரி வைக்கும்!
வீரம் பேசிய
மொழிகள் நுடமாகும்!
காஞ்சனையின்
கடைவிழியைக் கண்ட
காளையன்,
கத்தி யிருந்தும்
கோழை யாவான்!
போர்க்குற்றம் உயிர்த்
தெழும்!
மயக்கங்களால்
சூளுரைகள்
மாண்டு கிடக்கும்....
(இப்படி எழுத வைத்துவிட்டாள்...)
நின் மீது கொண்ட
மயக்க நிலை
தீராது கண்மணியே....